இந்தியாவில் தென் கடற்படை கட்டளை பொறுப்பான கொடி அதிகாரி கடற்படை தலைமையகத்தில் விஜயம்
 

இந்தியாவில் தென் கடற்படை கட்டளை பொறுப்பான கொடி அதிகாரி வைஸ் அட்மிரல் ஏஆர் கார்ச் அவர்கள் இன்று (ஆகஸ்ட், 02) கடற்படை தலைமையகத்தில் விஜயமொன்ரை மேற்கொன்டுள்ளார். அங்கு அவருக்காக கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தபட்டது. இவரை மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் நிராஜ் ஆடிகல அவர்கள் கடற்படை தலைமையகத்துக்கு அன்புடன் வரவேற்றியுள்ளார். குறித்த நிகழ்வுக்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள் உட்பட கடற்படையின் பொது இயக்குநர்கள் கழந்துகொன்டுள்ளனர்.

அதன்பின் வைஸ் அட்மிரல் கர்ச் அவர்கள் கடற்படை தளபதிவுடன் இரு தரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கடற்படை இயக்குநர்கள் வாரியம் கூடத்தில் ஏற்பாடுசெய்துள்ள சிறப்பு கலந்துரையாடலிலும் கடற்படை தளபதி உட்பட பொது இயக்குநர்களுடன் பங்கெற்று கடற்படை மூலோபாய இணைப்புகள் உட்பட பல முக்கியமான பிரச்சனைகளை பற்றி கருத்துக்கள் கலந்துரையாடப்பட்டதுடன் நினைவுச் சின்னங்களையும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.