கடற்படை மற்றும் கடல்சார் கலைக்கழத்தில் தொடர்பாடல் பாடசாலையின் நடைமுறை வகுப்பு அறை திறந்து வைப்பு
 

திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் கலைக்கழத்தில் தொடர்பாடல் பாடசாலையின் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நடைமுறை வகுப்பு அறைகள் இன்று (13) கிழக்கு கடற்படை கட்டளை தளபதி ரியர் அட்மிரல் டிராவிஸ் சின்னய்யா அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த வகுப்பு அறையின் வானொலி தகவல்தொடர்புகள், பல ஒலிபரப்பு நடவடிக்கைகள், தகவல்தொடர் இயந்திரங்கள் இயக்கப்படுத்தல் ஆகிய தொடர்பாடல் பிரிவு கடற்படை உருபினர்களின் நடைமுறை அறிவு அபிவிருத்தி செய்யவேண்டிய வசதிகள் கொண்டுள்ளது.மேலும் கப்பல்கள் மற்றும் படகுகள் இடையில் ஒரே நேரத்தில் தொடர்பாடல் ஒலிபரப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது எப்படி என்று நடைமுறையாக பயிற்சி பெற 19 நவீன இயந்திரங்கள் உள்ள பயிற்சி நிருவனமாகவும் இப் பாடசாலை கூறமுடியும்.

குறித்த நிகழ்வுக்காக கடற்படை கட்டளை கொடி அதிகாரி ரியர் அடமிரல் கபில சமரவீர கடற்படை மற்றும் கடல்சார் கலைக்கழகத்தின் தளபதி கொமடோர் ரோஹித்த பெரேரா, கொமடோர் கச்சப போல், தொடர்பாடல் பாடசாலையின் தளபதி லெஃப்டினென்ட் கமாண்டர் (தொடர்பாடல்) ரங்கன லக்மால் ஆகியவர்கள் உட்பட சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பல வீர்ர்கள் கழந்துகொன்டனர். இன் நிகழ்வு நினவு கூரும் வகையில் தொடர்பாடல் பாடசாலையின் தலைமை பயிற்சியாளர், சிறிய குழு அதிகாரி (தொடர்பாடல்) எச்எம்டப்எஸ்கே ஹேரத் அவர்களால் நினைவுச் சின்னம் ஒன்று கிழக்கு கடற்படை கட்டளை தளபதி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடதக்கது.