இலங்கை கடல் எல்லை மீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 07 இந்திய மீனவர்களுடன் 02 படகுகள் கைது
 

வட கடற்படை கட்டளையின் அதிவேகத் தாக்குதல் படகுக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீரர்களால் நேற்று (ஜுலை 12) நெடுந்தீவுக்கு வட மேற்கு பகுதி கடலிருந்து 12.5 மற்றும் 9.5 கடல் மைல்கள் தூரத்தில் (பொடம் ட்ரோலின்) முரையில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 07 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இரு மீன்பிடி படகுகள் கைது செய்யப்பட்டுள்ளது.

மீன்பிடி படகுகள் மற்றும் பொருற்கள் காரைநகர் இலங்கை கடற்படை கப்பல் எலார நிருவனத்துக்கும் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் காங்கேசன்துறை இலங்கை கடற்படை கப்பல் உத்தர நிருவனத்துக்கும் கொன்டுவந்த பின் மேலதிக நடவடிக்கைகளுக்காக யாழ் கடற்றொழில் உதவிப் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.