கடற்படை மரைன் படைப்பிரிவினரின் நீல திமிங்கலம் III பயிற்சி வெற்றிகரமாக பூர்த்திசெய்யப்பட்டுள்ளது.
 

கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன அவர்களது நோக்களுக்கு அமைவாக நிறுவப்பட்டுள்ள இலங்கை கடற்படை மரைன் படைப்பிரிவின்  இரன்டாம் படைப்பிரிவினரால் தங்களுடைய பயிற்சிகளின்  இறுதி பயிற்சியான நீல திமிங்கலம் III இன்று (ஜுலை 12) பூர்த்திசெய்துள்ளனர்.

கிழக்கு கடற்படை கட்டளையின் திரியாய இங்கை கடற்படை கப்பல் வலகம்பா நிருவனம் அருகில் சாகரபுர கடற்கரையில் நடத்தபட்ட குறித்த பயிற்சிக்காக கடற்படை மரைன் படைப்பிரிவின்  159 வீர்ர்கள் கழந்துகொன்டனர். புதிதாக நிறுவப்பட்டுள்ள இப்படைப்பிரிவு, கடல் மற்றும் தரை வழி படை நடவடிக்கைகளில் வெற்றிகரமாக ஈடுபடும் முதற்தர படையாக செயல்படவுள்ளதுடன் கடல் மார்க்கமாக வரும் எந்தவொரு ஆபத்தான தருணத்தையும் வெற்றிகரமாக முறியடிக்கும் தன்மையையும் கொண்டது. குறித்த பயிற்சிக்காக கடற்படையின் எல் 821 படகு, 04 துரித தாக்குதல் படகுகள், ஒரு துரித தாக்குதல் ரோந்து கப்பல், 08 கடலோர ரோந்து (ஐபிசி) படகுகள், இலங்கை விமானப்படையின் F7 போர் விமானம் மற்றும் MI 17 வகையில் ஹெலிகாப்டரும் கழந்துகொன்டுள்ளன.

இப் பயிற்சி பார்வையிட கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் ட்ராவிஸ் சின்னய்யா, கொடி அதிகாரி ரியர் அட்மிரல் கபில சமரவீர, கடற்படை தரை செயல்பாடுகளுக்கான இயக்குனர் கொமடோர் யூ ஐ சேரசிங்க ஆகியவர்கள் உட்பட பல சிரேஷ்ட அதிகாரிகள் கழந்துகொன்டர்.