கடற்படையினராள் நீரில் மூழ்கிக் கொண்டிருந்த இருவர் மீட்பு
 

கிழக்குக் கடற்படை கட்டளை நிலாவெலி இலங்கை கடற்படை கப்பல் விஜயபா மற்றும் இலங்கை கடலோர பாதுகப்பு படை உயிர்காப்பு பிரிவின் வீரர்கள் இணைந்து 2017 ஜூன் 29ம் திகதி கோபாலபுரம் கடலில் மூழ்கிக் கொண்டிருந்த இருவரை மீட்டனர்.

காலி, அக்குரனை பகுதியில் வசிக்கும் 19 மற்றும் 20 வயதான இவர்கள் குளிக்கும் போது நீரில் மூழ்கி இருக்கின்றனர். இவர்களை பாதுகாப்பாக மீட்ட பின்னர் கரை சேற்க கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.