வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு அவுஸ்திரேலிய அரசிடமிருந்து உதவிப்பொருட்கள்
 

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கபட்டுள்ள மக்களுக்குநிவாரணம் வழங்கும் நடவடிக்கைகளை மேலும் வினைத்திரனாக்கும் வகையில்அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் அளிக்கப்பட்டுள்ள நிவாரணப் பொருட்கள் இன்று(01) கொழும்பு, இலங்கை கடற்படை கப்பல் ரங்கல நிருவனத்தில் வைத்து கடற்படைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கிடைக்கப்பெற்ற நிவாரணப் பொதிகளை அவுஸ்திரேலியஉயர்ஸ்தானிகர் பிரைஸ் ஹட்செஸ்ஸன் வெளிவிவகார அமைச்சர் கௌரவ ரவி கருணாநாயக்கஅவர்களிடம் வைபவ ரீதியாக கையளித்தார். இவ்வாறு கையளிக்கப்பட்ட நிவாரணப்பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிர்தளிக்கும் வகையில் வெளிவிவகாரஅமைச்சர் கடற்படைத்தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களிடம்கையளித்தார்.

குறித்த நிகழ்வுக்காக இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய தூதர்கள்,மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் நிராஜ் ஆட்டிகல பணிப்பாளர் நாயகம் கடற்படை நடவடிக்கைகள் ரியர் அட்மிரல் பியல் டி சில்வாஇலங்கையின் ஆஸ்திரேலிய பாதுகாப்பு ஆலோசகர், கேப்டன் ஜேசன் சியர்ஸ் ஆகியவர்கள் உட்பட பல சிரேஷ்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

அத்துடன், இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய இருதரப்பு உறவினைஅதிகரிக்கும் வகையில் மேலும் சில நிவாரணப் பொருட்கள் இன்றய தினமும்(01)அவுஸ்திரேலிய அரசினால் வழங்கப்படும்.