கண்காட்சியில் பங்குகொள்வதற்காக இலங்கை கடற்படை கப்பல்கள் சிங்கப்பூர் பயணம்
இலங்கை கடற்படையின் ஆழ்கடல் ரோந்துக் கப்பல்களான எஸ் எல் என் எஸ் சாகர மற்றும் எஸ் எல் என் எஸ் நந்திமித்ர இன்று (மே .05) சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றன. குறித்த கப்பல்கள் சிங்கப்பூரில் நடைபெற இருக்கும் சர்வதேச கடல்சார் பாதுகாப்பு கண்காட்சியில் பங்குகொள்வதற்காக கொழும்பு துறைமுகதிருந்து புறப்பட்டுச் சென்றது எஸ் எல் என் எஸ் சாகர கப்பலில் கட்டளை அதிகாரியாக கேப்டன் அனுர தனபால அவர்களும் எஸ் எல் என் எஸ் நந்திமித்ர கப்பலின் கட்டளை அதிகாரியாக கேப்டன் நிஷாந்த பீரிஸ் அவர்கள் கடமைகளை செய்கிரார்கள்
மேலும், இக்கண்காட்சியில் பங்குகொள்வதற்காக 34 கடற்படை அதிகாரிகள் உட்பட 290 கடற்படை வீரர்கள் கலந்துகொள்ள உள்ளதுடன், குறித்த கப்பல்கள் இம்மாதம் 12ம் திகதி முதல் 18ம் திகதி வரை தரித்து நிற்கும். இதன்போது, இலங்கை கடற்படை வீரர்கள் யுத்தக்கப்பல்களின் காட்சிப்படுத்தல், சர்வதேச கடல்சார் பாதுகாப்பு மாநாடு, சர்வதேச கடற்படை பொறியியல் மாநாடு, கடற்படை வலையமைப்பு நிகழ்சிகள் போன்ற பல நிகழ்வுகளில் கலந்து கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எஸ் எல் என் எஸ் சாகர மற்றும் எஸ் எல் என் எஸ் நந்திமித்ர கப்பல்கள் மே மாதம் 18ம் திகதி சிங்கப்பூர் விட்டு இலய்கைக்கு புரப்படும்