கடற்படையினர் நான்கு பேரை 3.4 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் கைது
 

புலனாய்வு பிரிவினர் வழங்கிய தகவலின் மூலம் 3.4 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் நான்கு பேரை மட்டக்குளிய பிரதேசத்தில் வைத்து போலீசாரின் உதவியுடன் நேற்று (24) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் முச்சக்கர வண்டி மூலம் கேரள கஞ்சா ஏற்றிச் செல்லும் போது கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யபட்ட குறித்த நபர்கள் மற்றும் கேரள கஞ்சா ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைக்காக மட்டக்குளிய பொலிஸ் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.