சட்டவிரோத கஞ்சா தோட்டம் கண்டுபிடிக்கப்பட்டதுடன் மான் இறைச்சியுடன் ஒருவரும் கைது
 

புலனாய்வு தகவலின் மூலம் கிடைக்கப் பெற்ற தகவலின்படி தனமல்வில பகுதியில் மேற்கொள்ளபட்ட சோதனையின் போது 26.5 கிலோகிராம் மான் இறைச்சியுடன் ஒருவரும் கதிர்காமம் பொலிஸ் விசேட செயலணி அதிகாரிகளுடன் இணைந்து கடற்படையினரால் கைது செய்யபட்டுள்ளார். கைதுசெய்யபட்ட குறித்த நபர் மற்றும் மான் இறைச்சி போன்றன மேலதிக சட்ட நடவடிக்கைக்காக தனமல்வில பொலிஸ் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, கதிர்காமம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது பெரிய அளவில் பயிரடப்பட்டிருந்த கஞ்சா தோட்டமும் கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 3000 த்திற்கு மேற்பட்ட கஞ்சா செடிகள் நெருப்பு வைத்து எரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.