சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 08 உள்நாட்டு மீனவர்கள் கைது.
 

மேற்குக் கடற்படை கட்டளை இலங்கை கடற்படை கப்பல் கலனி நிருவனத்தின் வீர்ர்களால் நேற்று (13) நீர்கொழும்பு பிரதேச கடலில் தனியிழை வலைகள் மூலம் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 08 உள்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது கண்ணாடியிழை படகுகள் மற்றும் இரு தனியிலை வலைகள் ஆகியன கைப்பற்றப்பட்டன. அத்துடன் குறிதத சந்தேக நபர்களும் பொருள்களும் மேலதிக நடவடிக்கைகளுக்காக நீர்கொழும்பு கடற்றொழில் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அதே தினம் புத்தள வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் தம்பபன்னி வீரர்களால் சினனகருக்கபொனெ பகுதியில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படவிருந்த 20 கிலோ கடல் ஆமை இறைச்சிவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள குறித்த சந்தேக நபர் மற்றும் இறைச்சி ஆகியன மேலதிக நடவடிக்கைகளுக்காக மகாவெவ கடற்றொழில் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.