பாக்கிஸ்தான் கடற்படையின் இரு கப்பல்கள் கொழும்பு துறைமுகத்துக்கு வருகை
 

நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு பாக்கிஸ்தான் கடற்படையின் கப்பல்களான “ஹின்கொல்” மற்றும் “பாசோல்” இன்று (05) கொழும்பு துறைமுகத்துக்கு வந்தடைந்தன. வருகைதந்த கப்பல்களுக்கு இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளின் படி பாரம்பரிய வரவேற்பொன்றை அளித்தது.

3 நாள் உத்தியோகபூர்வ விஜயத்துக்கு வந்தடைந்த இப் கப்பல்கள் நாட்டில் தங்கியுள்ள காலப்பகுதியில் இலங்கை கடற்படைவுடன் பல நிகழ்ச்சிகலின் கழந்துக்கொள்ளும். இந்த விஜயத்தின் போது இரு நாடு கடற்படையின் இடையே ஒத்துழைப்பு வலுப்படுத்தும் நோக்கத்தின் இலங்கை கடற்படையால் ஏற்பாடு செய்யப்படும் நட்பான போட்டிகள்,கலாச்சார மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கு இப் கப்பல்களின் பணியாளர்கள் கலந்து கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.இந்த கப்பல்கள் ஜனவரி 8 திகதி நாட்டை விட்டு வெளியேறும்.