திரப்பனே மஹாநாம கல்லூரியின் நிருவப்பட்ட நீர் சுத்திகரிப்பு இயந்திரம் மாணவர்களுக்கு திறந்து வைப்பு
 

கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி மேற்கொள்ளப்படும் பல சமூக நலத் திட்டங்களின் மற்றொரு திட்டம் திரப்பனே பகுதியில் நடத்தப்பட்டது.அதன் படி மஹாநாம கல்லூரியின் மாணவர்கள் மற்றும் மக்களுடைய சுத்தமான குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இப் கல்லூரியின் புதிதாக நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு இயந்திரம் (RO Plant) வடமத்திய கடற்படை கட்டளைப் தளபதி ரியர் அட்மிரல் மெர்ரில் விக்ரமசிங்க அவர்களால் இன்று (4) திறந்து வைக்கப்பட்டது.

ஏற்கனவே அடையாளம் காணப்படுகின்ற சிறுநீரக நோயாளிகள் கணிசமான அளவிள் இருக்கும் இப் பகுதியிக்கு சுத்தமான குடி நீர் வழங்குவத்துக்கு கடற்படையின் முழு பங்களிப்பின் ஃப்ளை மிஷன் சிங்கப்பூர் நிறுவனம் அனுசரணையுடன் கட்டப்பட்ட இப் நீர் சுத்திகரிப்பு இயந்திரம் மூலம் பாடசாலையில் 1200 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கும், 75 ஆசிரியர்களுக்கும் இப் பகுதியின் 750 குடும்பங்களுக்கும் சுத்தமான குடிநீர் வசதி வழங்கப்படும்.மேலும் நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நிருவதுக்கு மூன்றாவது முறையாகவும் ஃப்ளை மிஷன் நிறுவனம் அனுசரணை வழங்கியது.

கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அலகு இது வரை 86 நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் சிறுநீரக நோய் பரவலாக காணப்படும் இப்பிரதேசங்களில் நிருவப்பட்டு 40,600 குடும்பங்களுக்கு மற்றும் 34,200 மேற்பட்ட மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் வசதி வழங்கப்படும் எதிர்காலத்திலும் இத்தகைய பல சமூக சேவைகள் இலங்கை கடற்படை மூலம் நடத்தப்படும். இந் திறப்பு விழாவுக்கு மகா சங்கத்தினர், சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள், திரப்பனே மஹாநாம கல்லூரியின் அதிபர் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.