2016 ஆன்டு கடல்சார் பாதுகாப்புப் பணிகளின் கடற்படை 226 கோடி ரூபா வருமானம் சம்பாதித்தார்கள்
 

கடல்சார் பாதுகாப்புப் பணி நடவடிக்கைகள் எவன்கார்ட் பாதுகாப்பு சேவையில் கடற்படை பொறுப்பேற்ற பின் கடந்த 2016 ஆண்டில் ரூபா 226 கோடி வருமானம் அரசாங்கத்துக்கு சம்பாதிக்க கடற்படைக்கு முடிந்தது. அதன் படி 2016 ஜனவரி முதல் டிசம்பர் வரை 6371 செயற்பாடுகளுக்கு கடற்படை பங்கேற்றியது. அதின் 5928 செயற்பாடுகள் காலி துறைமுகத்தில் செய்யப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட்ட செயல்பாடுகளின் எண்ணிக்கை 443 ஆகும்.

2015 நவம்பர் 13 ஆம் திகதி இந்த பணிகள் கடற்படயினர் பொறுப்பேற்றுக் கொன்டனர். அப்பொழுதில் இருந்து நேற்று (2) வரை சம்பாதித்த முலு வருமானம் 263 கோடி ரூபா ஆகும். அதன் படி கப்பல் போக்குவரத்து வாரங்கள் 7,457 செயல்பாடுகளுக்கு பங்கேற்றி அது மூலம் ரூபா 226 கோடி வருமானம் அரசாங்கத்துக்கு சம்பாதிக்க முடிந்தது.அதன் படி காலி மற்றும் கொழும்பு செயற்பாடுகள் மையங்கள் மூலம் 6922 செயற்பாடுகள் மற்றும் 535 செயற்பாடுகள் நடத்தி சுமார் ஒரு மாதக்குள் 573 செயற்பாடுகள் செய்யப்பட்டது.

மேலும் இது மூலம் காலி மற்றும் கொழும்பு செயற்பாடுகள் மையங்கள் மூலம் ஆயுதங்கள் பெறுதல்,வைத்திருத்தல்,வழங்குதல் மற்றும் துணை பிற பாதுகாப்பு சேவைகள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பாதுகாப்பு அணிகளுக்கு வழங்குகிறது. இவ்வாறு ஈட்டபட்ட வருமானத்தை அரசாங்கத்தின் ஒன்றிணைந்த நிதியத்துக்கு கையளிக்க கடற்படையினர் மேற்கொள்வார்கள்.

முந்தைய பாதுகாப்பு ஒப்பந்தம் ரத்துசெய்த பிரகு வர்த்தக கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்குதல் மற்றும் வர்த்தக கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கும் நிறுவனங்களுக்கு சேவைகளை வழங்குதல் ஆன காரியங்கள் கடற்படைக்கு ஒப்படைக்கபட்டது.அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவரின் வெளியிடப்பட்ட சிறப்பு ஆணை மூலம் பாதுகாப்பு வழங்கும் பொறுப்பு கடற்படையினருக்கு ஒப்படைக்கபட்டது.

இப் கடமைகளை ஒப்புக்கொண்ட பிறகு கப்பல்களில் கடற்பகுதி பாதுகாப்பு கடமை,ஆயுதங்கள் மற்றும் வெடிபொருற்கள் வழங்குதல் கடற்படையின் முக்கியமான கடமையாகும். மேலும், உயர் ஆபத்து பகுதிகள் ஊடாக தொடர்ந்து செல்லும் வணிக கப்பல்களில் பாதுகாப்பு தேவைகள் காலி மற்றும் கொழும்பு பகுதி வழியாக மிகவும் திறமையாக கடற்படை அதிகாரிகள் மற்றும் வீரர்கள் நடைமுறைக்கு எடுத்துள்ளது.