பதவிய பகுதியில் நிருவப்பட்ட இன்னொரு நீர் சுத்திகரிப்பு இயந்திரம் திறக்கப்பட்டது
 

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களின் வழிகாட்டளுக்கு அமைய இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி மேற்கொள்ளப்படும் பல சமூக நலத் திட்டங்களின் இன்னோரு திட்டம் முடிவு செய்யப்பட்டது. அதன் படி மஹசென் மஹா வித்தியாலயத்தின்  நிருவப்பட்ட  நீர் சுத்திகரிப்பு இயந்திரம் வடமத்திய கடற்படை கட்டளைப் தளபதி ரியர் அட்மிரல் மெர்ரில் விக்கிரமசிங்க அவராள் இன்று (01) திறக்கப்பட்டது.

இந்த நீர் சுத்திகரிப்பு இயந்திரம் பிண அமைப்பின் (PINA Organization) நிதியுதவிவுடன் கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அலகு அதன் தொழில்நுட்ப அறிவு பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது. இந்த நீர் சுத்திகரிப்பு இயந்திரம் மூலம் 1000 இப் பாடசாலை மாணவர்கள், 60 ஆசிரியர்கள் மற்றும் சுமார் 1000 குடும்பங்களுக்கு சுத்தமான குடிநீர் வசதி வழங்கப்படுகிரது.

சிறுநீரக நோய் பரவலாக காணப்படும் இப் பிரதேசங்களில் மக்களின் சுத்தமான குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதக்கு பெரிய முயற்சிகள் எடுத்து வருகின்ற கடற்படை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அலகு இது வரை 83  நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிருவப்பட்டுள்ளன. 2017 ஆண்டுக்கு நிருவப்பட்ட முதல் நீர் சுத்திகரிப்பு இயந்திரமாக இது பதிவாகும். இது வரை நாடு முழுவதும் நிருவப்பட்ட நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் மூலம் 39,250 குடும்பங்களுக்கு மற்றும் 29,200 மேற்பட்ட மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் வசதி வழங்கப்படுகிறது. எதிர்காலத்திலும் இத்தகைய பல சமூக சேவைகள் இலங்கை கடற்படை மூலம் நடத்தப்படும். இன் சமூக சேவை நாட்டின் பிற முகவர் மற்றும் துறைகளுக்கு ஒரு சிறந்த உதாரணமாகிவிட்டது. இந்த சமூக திட்டம் மூலம் கொடிய சிறுநீரக நோய் இலங்கையின் அகற்ற ஒரு பெரிய உதவியாக இருக்கிறது.

இன் நிகழ்வுக்காக வணக்கத்துக்குரிய துறவிகள், கத்தோலிக்க பாதிரியார்கள், பிண சங்கத் தலைவர் கலாநிதி அருண அபேகுனவர்தன அவர்கள், இந்த அமைப்பின் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள், இலங்கை கடற்படை சங்க பிரதிநிதிகள்,பதவிய பிரதேச செயலாளர், பாடசாலை குழந்தைகள் மற்றும் பிரதேச மக்கள் உடனிருந்தனர்.