கேரள கஞ்சா வைத்திருந்த ஐந்து நபர்கள் கைது
 

வடமத்திய கடற்படை கட்டளை பிராந்தியத்திட்குட்பட்ட கடற்படை கப்பல் கஜபா வின் வீரர்கள், மன்னார் பொலிசாருடன் இனைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் மன்னார் பிரதேசத்தில் வைத்து 4 கிலோ கேரள கஞ்சாவை பரிமாற்ற செய்வதில் ஈடுபட்டிருந்த 4 பேர்களை நேற்று (செப்டம்பர் 29) கைது செய்தனர். சந்தேக நபர்களும் கைப்பற்றப்பட்ட கஞ்சாவும் மேலதிக நடவடிக்கைக்காக மன்னார் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அதே தினம் மற்றும் ஒருவர் 2.5 கிலோ கேரளா கஞ்சாவுடன் ஹுங்கமை ஹென்திவத்தை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். கிரிந்தை கரையோர பாதுகாப்பு படை பிரிவினரால் வழங்கப்பட்ட தகவலை அடுத்து சூரியவெவை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இன்நபர் கைது செய்யப்பட்டார். சந்தேக நபரரும் கைப்பற்றப்பட்ட கஞ்சாவும் மேலதிக நடவடிக்கைக்காக ஹுங்கமை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்