சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஒருவர் கடற்படையினரால் கைது
 

தெற்கு கடற்படை கட்டளை பிராந்தியத்திட்குட்பட்ட தங்காலை, கடற்படை கப்பல் ருஹுனு வின் வீரர்கள் தங்காலை பொலிசாருடன் இணைந்து நாகுளுகமுவை பகுதியில் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது 3 தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளுடன் ஒரு மீனவரை நேற்று ( செப்டம்பர் 29) கைது செய்தனர். சந்தேக நபரும் கைப்பற்றப்பட்ட பொருள்களும் தங்காலை பொலிசாரிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

அதே தினம், கிழக்குக் கடற்படை கட்டளை பிராந்தியத்திட்பட்ட வாகரை, கடற்படை கப்பல் கஸ்யப வின் வீரர்களால் மட்டக்களப்பு கலப்பில் கைவிடப்பட்ட நிலையிலிருந்த ஒரு தோனியையும் 3 தனியிழை வலைகளையும் மீட்டனர். கடற்படை வீரர்களின் வருகையைக் கண்டு தப்பியோடிய மீனவர்களால் இப்பொருட்கள் கைவிடப்பட்டிருக்கின்றன. கைப்பற்றப்பட்ட பொருட்கள் மட்டகளப்பு கடற்றொழில் அதிகாரிகளிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளன.