பரிந்துரைக்கப்படும் மருந்துகள் சகிதம் ஒருவர் கைது
 

கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் படி மேற்கு கடற்படை கட்டளை பிராந்தியத்திட்குட்பட்ட உஸ்வெடகைய்யாவை, கடற்படை கப்பல் களணி யின் வீரர்கள், மருந்துகள் மற்றும் உணவு ஊடாடல்கள் வாரியம் மற்றும் கம்பஹா பொலிசாருடன் இனைந்து பரிந்துரைக்கப்படும் மருந்துகள் (டிரமடோல்) அடங்கிய 10 பெட்டிகளை வைத்திருந்த ஒரு நபரை நேற்று (29 செப்டம்பர்) சீதூவையில் கைது செய்தனர். இச்சந்தேக நபரால் விற்பனைக்காக ஆயத்தப்படுத்தப்பட்டிருந்த இம்மருந்து போதை மருந்தாகவும் சிலரால் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தேக நபரும் கைப்பற்றப்பட்ட மருந்தும் மேலதிக விசாரணைக்காக நீர்கொழும்பு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.