இரண்டு பங்கலாதேச கடற்படை கப்பல்கள் கொழும்பு வருகை
 

நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு பங்களாதேச கடற்படை கப்பல்களான பிஎன்எஸ் சொமுத்ரா அவிஜான் மற்றும் சொமுத்ரா ஜோய் இன்று (செப்டம்பர் 29) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன. வருகைதந்த கப்பல்களுக்கு இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளின் படி பாரம்பரிய வரவேற்பொன்றை அளித்தது.

கடற்படை தளபதி, வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்கள் இக்கப்பல்களுக்கு நாளை (செப்டம்பர் 30) விஜயம் செய்ய உள்ளார். மேலும் இரு கப்பல்களின் கட்டளை அதிகாரிகளான கப்டன் கம்ருல் ஹக் சவ்த்ரி மற்றும் கப்டன் எம் ஹுமாயன் கபீர் ஆகியோர் கடற்படை தளபதியை கடற்படை தலைமையகத்தில் வைத்து சந்திக்க உள்ளனர்.

ஆறு நாள் உத்தியோக பூர்வ விஜமொன்றை மேற்கொண்டு இங்கு வருகை தந்துள்ள இக்கப்பல்களின் குழுவினர், இரு நாட்டு கடற்படை உறுப்பினர்களிடையே நட்புணர்வை மேமேபடுத்தும் நோக்கில் இலங்கை கடற்படையினரால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள பல பயிற்சி உட்பட வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்துக்கொள்ள உள்ளனர்.