திருகோணமலையில் கடல் பவள கண்காணிப்பு மற்றும் மீள்நடுகை நிகழ்ச்சி
 

நீல வளங்கள் குழு மற்றும் வன ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு அறக்கட்டளை, டோக்யோ சீமெந்து நிறுவனத்தாருடன் இனைந்து கடல் பவள பாறைகள் அளவியல் முறை தொடர்பான பயிற்சி பட்டறை மற்றும் கடல் பவள மீள்நடுகை நிகழ்ச்சி ஒன்றை இலங்கை கடற்படையின் சுளியோடிகளுக்காக திருகோணமலை கடற்படை தளத்தில் நடத்தினர்.

இதன் முதல் கட்டம் கடந்த யூன் மாதம் 23 தொடக்கம் 30ம் திகதி வரை நடந்ததுடன், செப்டம்பர் 7ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இரண்டாம் கட்டம் தொடர்ந்தும் நடந்துக் கொண்டிருக்கிறது. சர்வதேச தரங்கள் மற்றும் நெறிமுறைகளுக்கேற்ப பவளப்பாறைகளை ஆய்வு செய்யும் முறைகள் தொடர்பில் பயிட்சியாலர்களின் அறிவை மேம்படுத்துமுகமாக விரிவுரைகள் மற்றும் நீருக்கடியில் பயிற்சிகள் நடத்தப்படுகின்றன. இதேவேளை கடற்படை சுழியோடிகள் டோக்யோ சீமெந்து நிறுவனத்தரினால் வழங்கப்பட்ட கொண்கிரீட் பவளப் பாறை பெட்டிகளில் பவளப்பாறைகளை நாட்டினர்.