சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 4 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

வடமத்திய கடற்படை கட்டளை பிராந்தியத்திட்குட்பட்ட நாச்சாதூவை கடற்படை கப்பல் புவனேக வின் வீரர்களால் முந்தம்பிட்டி, பெரியாறு கடல் பிரதேசத்தில் தனியிழை வலைகள் கொண்டு சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 4 உள்நாட்டு மீனவர்கள் நேற்று (செப்டம்பர் 13) கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்களுடன் ஒரு வள்ளமும் 4 தனியிழை வலைகளும் கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்டவர்களும் பொருள்களும் மன்னார் கடற்றொழில் இயக்குனரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.