அனுமதிக்கப்பட்ட தூரத்தை மீறி கடலட்டை பிடித்த 3 மீனவர்கள் கடற்படையினரால் கைது

கிழக்கு கடற்படை கட்டளை பிராந்தியத்தின் விரைந்து தாக்கும் படகு பீ 436 வீரர்களினால் வலயானைக்குளம் கடற்பரப்பில் அனுமதிக்கப்பட்ட தூரத்தை மீறி கடலட்டை பிடித்த 3 மீனவர்கள் கடற்படையினரால் இன்று (செப்டம்பர்.01) கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களுடன் 15 கிலோ கடலட்டை ஒரு கண்ணாடி இழை படகு 2 சோடி சுழியோடி காலணிகள், 10 ஒட்சிசன் சிலிண்டர்கள் மற்றும் ஒரு ஜீபிஎஸ் கருவியும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்களும் கைப்பற்றப்பட்ட முல்லைத்தீவு, கடற்படை கப்பல் கோதாபயவிற்கு கொண்டுவரப்பட்டு பொருட்களும் மேலதிக நடவடிக்கைக்காக முல்லைத்தீவு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.