அனுமதிப்பத்திரமின்றி கடலட்டை பிடித்த 7 மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

உரிய அனுமதிப்பத்திரமின்றி கடலட்டை பிடித்த 7 பேரை வடக்கு கடற்படை கட்டளை பிராந்தியத்திற்குட்பட்ட காங்கேசன்துறை, கடற்படை கப்பல் உத்தர வின் வீரர்களினால் நேற்று (ஆகஸ்ட் 31). கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களுடன் 2 கண்ணாடி இழை படகுகள் 5 சோடி சுழியோடி காலணிகள், 21 ஒட்சிசன் சிலிண்டர்கள் மற்றும் ஒரு ஜீபிஎஸ் கருவியும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

கைது செய்யப்பட்டவர்களும் கைப்பற்றப்பட்ட பொருட்களும் மேலதிக நடவடிக்கைக்காக பருத்தித்துறை கடற்தொழில் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.