5.5 கிலோ தங்கத்துடன் இரண்டு பேர் கடற்படையினரால் கைது

கடந்த இரவு (30) மீன்படி படகு மூலம் 5.5 கிலோ தங்கத்தை இந்தியாவிற்கு கடத்திச் செல்ல முயற்சி செய்த இரண்டு பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மீனவர்கள் போன்று வேடமிட்டு ஒரு தொகை தங்கத்தினை படகின் மூலம் கடத்திச் செல்ல முற்பட்ட வேளையில் குறித்த சந்தேக நபர்கள் காங்கேசன்துறைக்கு 8 மைல்களுக்கு அப்பால் உள்ள கடற்பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

காங்கேசன்துறையில் அமைந்துள்ள இலங்கை கடற்படை உத்தாரவிற்கு கிடைக்கப்பெற்ற புலானாய்வு தகவலுக்கமைய வடக்கு கடற்படை கட்டளை தலைமையக கடற்படை அதிகாரிகள் மற்றும் கடற்படை வீர்ரகள் ஆகியோர் இணைந்து பீ 464 அதி விரைவு தாக்குதல் படகு மேற்படி நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட ஒரு தொகை தங்கமும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ் சுங்கத்திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டனர்.