சீனிகம கடற்கரை பகுதியில் வைத்து கற்படையினாரல் ஒருவர் மீட்பு
 

சீனிகம விகாரை அமைந்துள்ள கடற்கரை பகுதியில் நீரினால் காவிச் செல்லப்பட்ட நபர் ஒருவரை கடற் படையின் துரிதமாக துலங்கி மீட்கும் நிவாரண படையணியினர் (30) மீட்டனர்.

ஹிக்கடுவயில் அமைந்துள்ள உள்ள சீனிகம விகாரை ஆண்டின் பருவகாலங்களில் அநேகமான பக்தர்களை ஈர்க்கும் பிரபல்யமான வழிபாட்டுத்தளங்களில் ஒன்றாகும். வழிபாடுகளில் ஈடுபடும் பெரும்பாலான பக்தர்கள் இங்கு தினமும் குளிக்கின்றனர். இவர்களை பாதுகாக்கும் வகையில் இக் கடற் கரை பிரதேசத்தில் கடற் படையின் துரிதமாக துலங்கி மீட்கும் நிவாரண படையணியினர் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் இக்குழுவினர் பொதுமக்களின் உயிர்களை பாதுகாக்கும் வகையில் அனைத்து நேரங்களிலும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.