வெளிசரை கடற்படை ‘அக்குவா கோல்ஃப் ரேஞ்சில்’ இலங்கை கோல்ப் சங்கத்தினால் கனிஷ்ட கோல்ப் பயிற்சி பட்டறை
 

தொழில்சார் மற்றும் சர்வதேச அறிமுகம் ஆகியவற்றை விருத்தி செய்யும் வகையில் இலங்கை கோல்ஃப் ஒன்றியத்தின் கனிஷ்ட கோல்ஃப் அபிவிருத்தி உப குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட கோல்ஃப் பயிற்சி, பிரபல இந்திய கோல்ஃப் தொழில்சார் பயிற்சியாளர் திரு. பம்பி ரந்தாவா அவர்களினால் நடாத்தப்பட்டது. இந் நான்கு நாள் பயிற்ச்சி முகாம் விக்டோரியா கோல்ப் மற்றும் விடுமுறை விடுதியில் கடன்த சனி மற்றும் ஞாயிறு (ஆகஸ்ட் 27& 28) தினங்களில் நடந்ததுடன் அதன் பின்னூட்டல் கடற்படையின் வெலிசறை ‘அக்குவா கோல்ஃப் ரேஞ்சில்’ கடந்த 29ம் & 30ம் திகதிகளில் நடைபற்றது.

இந்நிகழ்வில் இலங்கை கடற்படை, ரோயல் கொழும்பு கோல்ஃப் சங்கம், நுவரெலியா கோல்ப் சங்கம், விக்டோரியா கோல்ப், மற்றும் கண்டி ரிசோர்ட் ஆகியவற்றின் பயிட்சியாளர்கள், கோல்ப் விளையாட்டின் புதிய உத்திகளையும் திரு.பம்பி ரந்தாவிடமிருந்து தெரிந்துக்கொள்ள இப்பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டனர். கடற்படை அதிகாரிகளின் பிள்ளைகள் கோல்ப் கழகத்தின் தலைவர் சத்யஜித் விஜேகுனரத்ன வும் இனிகழ்வில் கலந்துக்கொண்டார்.

இவ்வாறாக நடத்தப்படும் பயிற்சி முகாம்களும் நிலையங்களும் இலங்கை கனிஷ்ட கோல்ப் வீரர்களினது அறிவினை விருத்தி செய்து புதிய தொழிநுட்ப பயிற்ச்சி விதிமுறைகளையும் மேம்படுத்திக் கொள்வதுடன் அவர்களின் திறமையினையும் மேம்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.அத்துடன் இலங்கை கடற்படை அக்குவா கோல்ஃப் ரைவிங் ரேஞ்சில் காணப்படுகின்ற கலை வசதிகளையிட்டு திரு. ரந்தாவவ தமது பாராட்டினையும் தெரிவித்துக்கொண்டார்.