50 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கடற்படையினரால் கைது
 

வடக்கு கடற்படை கட்டளை பிராந்தியத்தின் வேக தாக்குதல் படகு பி 483 ன் வீரர்கள், அன்றாட ரோந்து நடவடிக்கையில் போது 50 கிலோ கஞ்சாவுடன் ஒருவரை பருத்தித்துறைக்கு வடக்கே உள்ள கடல் பிரதேசத்தில் வைத்து இன்று காலை (ஆகஸ்ட் 28) கைதுசெய்தனர். மேலும் கஞ்சா கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட ஒரு படகும் மற்றைய பொருள்களும் கைப்பற்றப்பட்டன.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரும் பொருள்களும் காங்கேசன்துறை பொலிசாரிடம் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.