கடலில் தத்தளித்த 3 மீனவர்கள் கடற்படையினரால் மீட்பு

தெற்கு கடற்படை கட்டளை பிரதேசத்திட்குட்பட்ட பானமை, கடற்படை கப்பல் மகானாக வின் வீரர்களால் ‘நலீஷ புதா 4’ எனும் மீன்பிடி படகில் சென்ற 3 மீனவர்கள் நேற்று (15) மீட்கப்பட்டார்கள். ஓகந்தைக்கு அப்பால் கடல் பகுதியில் வைத்து ஏற்பட்ட விபத்து காரணமாக நீரில் மூழ்கிக் கொண்டிருந்த படகிலிருந்த மீனவர்களே இவ்வாறு மீட்கட்டார்கள்.

மீட்கப்பட்ட மீனவர்கள் கடற்படையினரால் பாதுகாப்பாக கரைக்கு கொண்டுவரப்பட்டதுடன் உணவு, நீர் மற்றும் முதலுதவி சிகிச்சைகளும் அளிக்கப்பட்டன. என்னினும் விபத்திற்குள்ளான படகு முழுமையாக நீரில் மூழ்கியது என்பது குறிப்பிடத்தக்கது.