யுத்தத்தில் காயமடைந்த கடற்படை வீரர்களுக்கான விடுமுறை விடுதி தியத்தலாவையில் திறந்துவைப்பு
 

நாட்டிற்காக யுத்தம் செய்து காயமடைந்த கடற்படை வீரர்களுக்காக இரண்டு விடுமுறை விடுதிகளை கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி யமுனா விஜேகுனரத்ன அவர்களின் அழைப்பின் பேரில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களினால் தியத்தலாவையில் வைத்து சனிக்கிழமை (யூலை 30) திறந்து வைக்கப்பட்டது.

குறிப்பிட்ட இவ் விடுமுறை விடுதி யுத்தத்தில் காயமடைந்த கடற்படை அதிகாரிகள் மற்றும் வீரர்கள்ஆகியோருக்கு நாட்டில் உள்ள ஒரே விடுமுறை விடுதிகளாகும். இவ்வாறான வசதி, காயமடைந்த கடற்படை வீரர்களுக்கு காணப்பட்ட குறையை நிவர்த்தி செய்யும் வகையில் கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி யமுனா விஜெகுனரத்ன அவர்களினால் இச்செயற்றிட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ரூபா. 21 மில்லியன் செலவில் கடற்படை சேவா வனிதா அமைப்பின் நிதி உதவியுடன் குறுகிய காலத்திற்குள் இவ் விடுமுறை விடுதிகள் நிர்மாணிப் பணிகள் நிறைவு செய்யப்பட்டன. கடற்படை அதிகாரிகள் மற்றும் வீரர்கள் ஆகியோருக்கு என இரண்டு தொகுதிகளை கொண்ட இவ்விடுமுறை அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் அங்கவீனமுற்ற வீரர்களுக்கான விசேட வசதிகளும் இவ்விடுமுறை விடுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன. கடற்படையில் தற்சமயம், 380 க்கும் அதிகமான ஓய்வுபெற்ற மற்றும் 95 சேவையிலுள்ள காயமடைந்த கடற்படை வீரர்கள் உள்ளனர். தியத்தலாவையில் அமைக்கப்பட்ட இவ்விடுமுறை விடுதியின் மூலம் காயமடைந்த கடற்படை வீரர்களுக்கு மேலும் பல வசதிகள் கிடைக்கும்.

இந்நிகழ்வில் கடற்படை பிரதானி ரியர் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்ஹ, கடற்படை மேற்கு கட்டளை தளபதி ரியர் அட்மிரல் ஜயந்த டி சில்வா மற்றும் சேவா வனிதா பிரிவின் உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.