அமெரிக்க கடற்படை கப்பல் “நியூ ஓர்லீன்ஸ்” கொழும்பு வருகை
 

நல்லெண்ண விஜெயமொன்றை மேற்கொண்டு அமெரிக்க கடற்படை கப்பல் “எல்பிடி- 18யுஎஸ்எஸ் நியூ ஓர்லீன்ஸ்” (LPD-18 USS New Orleans) இன்று (24) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. வருகை தந்த கப்பளுக்கு இலங்கை கடற்படையினரால் கடற்படை பாரம்பரிய மரபுகளுடன் கூடிய வரவேற்பு அளிக்கப்பட்டது.

தமது ஆறு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் போது “நியூ ஓர்லீன்ஸ்” கப்பலின் சிப்பந்திகள் இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட பல நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளனர். அதற்கமைய இருநாட்டு கடற்படை குழுக்களும் வெலிசறை கடட்படை தளத்தில் கிரிக்கட், பேஸ்போல், கூடைப்பந்து, உதைப்பந்து மற்றும் கரப்பந்தட்ட நட்பு ரீதியிலான போட்டிகளில் கலந்துக்கொள்ள உள்ளனர். இம்மாதம் 29ம் திகதி நாட்டை விட்டுச் செல்லவுள்ள இக்கப்பல் இக்காலப்பகுதியில் இலங்கை கடற்படையினருடன் பசேஜ் பயிற்சி ஒன்றிலும் ஈடுபடவுள்ளது.