கடற்படையினரால் 156 கிலோ கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டது
 

வடமேற்கு கடற்படை கட்டளை பிரதேசத்தின் சிலாவத்துரை, இலங்கை கடற்படை கப்பல் தேரபுத்த ரேடார் நிலையத்தின் கடற்படை வீரர்கள் நேற்று (22) அரிப்பு பிரதேசத்திற்கப்பால் கடலில் சந்தேகத்திட்கிடமான படகொன்றை கண்டுபிடித்ததையடுத்து மேட்கொள்ளப்பட்ட தேடுதலின்போது 156. 5 கிலோ கேரளா கஞ்சாவை அரிப்பு கடற்கரையில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடித்தனர். மேற்படி கஞ்சா மன்னார் போதை பொருள் தடுப்பு பிரிவினரிடம் மேலதிக நடவடிக்கைகளுக்காக கையளிக்கப்பட்டது.