சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 3 உள்நாடு மீனவர்கள் கடற்படையினரால் கைது
 

வடமத்திய கடற்படை கட்டளை பிரதேசத்தின் மன்னார், இலங்கை கடற்படை கப்பல் கஜபாவிட்குட்பட்ட கடற்படை வீரர்கள் சௌத்பார் பிரதேசத்திற்கு அப்பால் கடலில் தனி இழைகளால் கட்டமைக்கப்பட்ட வலைகள் மூலம் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 3 உள்நாடு மீனவர்களை நேற்று (22) கைதுசெய்தனர்.

கைதுசெய்யப்பட்ட நபர்களும் அவர்கள் பயன்டுத்திய 3 தனி இழை வலைகளும் மேலதிக நடவடிக்கைகளுக்காக மன்னார் கடற்றொழில் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்கள்.