பொலிஸ் மா அதிபர் கடற்படை தளபதியுடன் சந்திப்பு
 

பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர அவர்கள் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவர்களை கடற்படை தலைமையகத்தில் வைத்து இன்று (22) காலை சந்தித்தார். வருகை தந்த பொலிஸ் மா அதிபருக்கு கடற்படையினரால் ஒரு மரியாதை அணிவகுப்பும் வழங்கப்பட்டது. இதுவே அவர் புதிய பொலிஸ் மா அதிபராக பதவியேற்ற பின் கடற்படை தளபதியை உத்தியோகபூர்வமாக சந்திக்கும் முதல் சந்தர்ப்பமாகும்.

வைஸ் அட்மிரல் விஜேகுனரத்ன அவர்கள் கடற்படை தலைமையகத்திற்கு வருகை தந்த பொலிஸ் மா அதிபரை சிநே கபூர்வமாக வரவேற்றார். பின்பு இருவருக்குமிடையே நடந்த கலந்துரையாடலில் பரஸ்பர விடயங்கள் தொடர்பாக கருத்துக்களை பரிமாறிக்கொண்டதுடன் இரு ஸ்தாபனங்களுக்கிடையிலான நீண்ட கால உறவுகளை ஞாபகார்த்தப்படுத்தும் முகமாக நினைவு சின்னங்கலையும் பரிமாரிக்கொண்டனர். இந்நிகழ்வில் கடற்படை உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.