கடுமையாக சுகவீனமுற்றிருந்த மீனவரை காப்பாற்ற கடற்படை உதவி
 

இலங்கை கடற்படையினர், தெற்கு கடல் பிராந்தியத்தில் “சுபோதா III” எனும் ஆழ் கடல் மீன் பிடி படகில் கடுமையாக சுகவீனமுற்றிருந்த ஒரு மீனவரை கரை கொண்டுவர நேற்று (19) உதவியளித்தனர். கடற்படை தலைமையக கட்டுப்பாட்டரையின் அறிவுறுத்தலுக்கமைய கடற்படையின் கப்பல் சுரநிமல அப்படகை நோக்கிச் செலுத்தப்பட்டது.

காலி கடலிலிருந்து சுமார் 150 கடல் மைல்கலுக்கப்பல் “சுபோதா III” வில் இருந்த நோயாளி நள்ளிரவு வேளையிலேயே சுரநிமல கப்பலுக்கு மாற்றப்பட்டதுடன் முதலுதவி சிகிட்சையும் அளிக்கப்பட்டது. உடல் நீர் வரட்சியினால் பாதிக்கப்பட்டிருந்த அந்நோயாளியின் நிலை சீரற்ற கடல் நிலை காரணமாக மேலும் மோசமடைந்திருந்த வேளையில் கடற்படையின் அதிவேக படகு P 435 இற்கு மாற்றப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக இன்று (20) கரைக்கு கொண்டுவரப்பட்டார்.