அவுஸ்ரேலியக் கடற்படையின் எச்.எம்.ஏ.எஸ்.பேர்த் கப்பல் கொழும்புத் துறைமுகத்திற்கு வருகை

நல்லெண்ண அடிப்படையில் அவுஸ்ரேலியக் கடற்படையின் ‘எச்.எம்.ஏ.எஸ் பேர்த்’ எனும் ஏவுகணைப் போர்க்கப்பல் ஒன்று நேற்று (19) கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.வருகை தந்த போர்க்கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படைச் சம்பிரதாய முறைப்படி வரவேற்றனர்..

கடற்படையினருடனான உறவுகளை வலுப்படுத்தும் வகையில் இலங்கை கடற்படையினாரல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல்வேறு நிகழ்வகளில் அவுஸ்ரேலியப் போர்க்கப்பலின் மாலுமிகள் மற்றும் இலங்கை கடற்படையினர் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.இக்கப்பல் எதிர்வரும் 23ஆம் திகதி வரை கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நிற்கும்