இலங்கையில் பயிற்சி பெற்ற மடகாஸ்கர் மற்றும் கொமொரோஸ் படை வீரர்கள் வெளியேற்று.

ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் அலுவலகத்தினால் United Nations Office on Drugs and Crime - UNODC) விதிப்புரைப்படி மடகாஸ்கர் மற்றும் கொமொரோஸ் படை வீரர்களுக்கான சிறப்பு படகுப் படையணிப் பயிற்சிபெறுக்கொடுக்க இலங்கை கடற்படை நடவடிக்கை செய்யுள்ளனர். தமது விஷேட வதிவிடப் பயிற்சியினை முடித்து வெளியேறும் நிகழ்வு இன்று (மே,27) காலை திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்தில் பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர். கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்களின் தலைமையில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களின் பங்குபற்றுடன் இடம்பெற்றது.

மேற்படி பயிற்சியானது ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருள் மற்றும் குற்றவியல் அலுவலகத்தினால் இலங்கை கடற்படையினரிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கினங்க முன்னெடுக்கப்பட்டது. இதற்கமைய இலங்கை கடற்படையினரால் பயிற்சியளிக்கப்பட்ட முதலாவது குழுவினர் இவர்களாகும். இவர்களுக்கான கடற்படை சிறப்பு படகுப் படையணியின் பயிற்சி நடவடிக்கைகள் திருகோணமலை கடற்படைத்தளத்திலும் கடலோர காவற்படையின் பயிற்சி நடவடிக்கைகள் மிரிஸ்ஸவிலும் இடம்பெற்றது.

இப்பயிற்சிக் குழுவில் கொமொரோஸ் கடலோர காவற்படையைச் சேர்ந்த ஆறு வீரர்களும் மடகாஸ்கர் கடற்படையைச் சேர்ந்த ஆறு வீரர்களும் உள்ளடங்குகின்றனர். இம்மாதம் 03ம் திகதி தொடக்கம் 28ம் திகதி வரை இடம்பெற்ற இப்பயிற்சியானது கிழக்கு ஆபிரிக்க கடற்பரப்பில் கடற் கொள்ளை மற்றும் போதைப்பொருள் கடத்தல்களை முறையடிக்க மடகாஸ்கர் மற்றும் கொமொரோஸ் நாட்டு படையினருக்கு சாதகமாக அமையவுள்ளது.அத்துடன் இன்று காலை இடம்பெற்ற நிகழ்வில் தேடிக் கைப்பற்றுதல் பற்றிய செய்முறைப்பயிற்சி காட்சிப்படுத்தப்பட்டதுடன் வெற்றிகரமாக பயிற்சியினை பூர்த்தி செய்த வர்களுக்கான சான்றிதள்களும் வழங்கி வைக்கப்பட்டது. இந்நகழ்வில் துதுவர்கள் பலர் உள்ளிட்ட கடற்படையின் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.