சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட 14 உள்நாட்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது

சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட 14 உள்நாட்டு மீனவர்கள் இரு வேறு சந்தர்ப்பங்களில் கடற்படையினரால் 03 ஆம் திகதியன்று கைதுசெய்யப்பட்டனர். இவர்களில் ஐவர் மன்னார் வெடிதலதீவுக்கும் மட்டலம்பிட்டிற்கும்  இடையே சட்டவிரோத மீன்பிடியின் ஈடுபட்ட வேளையில் ‘புவனெக’ கடற்படை தளத்தின் கடற்படை வீரர்களால் கைதுசெய்யப்பட்டனர். இவர்களுடன் ஐந்து படகுகளும்,160 இரும்பு (GI Pipes)   தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலையும் கைப்பற்றப்பட்டன. கைதுசெய்யப்பட்ட மீனவர்களும்  பொருள்களும் மன்னார் கடற்றொழில் உதவி பணிப்பாளரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டனர். 

அதேதினம் ‘தேரபுத்த’ கடற்படை தளத்தின் கடற்படை வீரர்களால் மன்னார் கொண்டச்சிகுடா  கடளில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 04 மீனவர்கள் கைதுசெய்யப்பட்டனர். இவர்களுடன் ஒரு படகும் கடல் அட்டைகள் 1.5 கிலோ ஜி பி எஸ் உபகரணங்களும், 04 சோடி சுழியோடும் காலணிகள்,05 சுழியோடி முகமூடிகள், கைப்பற்றப்பட்டன. இவ்வாறு கைதுசெய்யப்பட்ட மீனவர்களும்  பொருள்களும் சிலாவதுறை பொலிஸாரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டனர். இதைவேலை மட்டகளப்பு   கடற்றொழில் பரிசோதர் அதிகாரிகளின் உதவியுடன் ‘காஸ்ஷிப’ கடற்படை தளத்தின் வீரர்களால் மட்டகளப்பு சிட்டிவிலுகம் பிரதேசத்தில் வீட்டிலுள்ள மறை இருந்த மட்டிகள் 1008 ஒருவருடன் கைப்பற்றப்பட்டன. மேலும் மெய் மாதம் 2ம் திகதி கிலினொச்சி யக்துடுவ கடல்பரப்பில் 04 மீனவர்களுடன் 2 இலகு படகுகளும், 2 ஜீபீஎஸ் இயந்திரங்கள் 3 மீன்பிடி வலையக்கள் மற்றும் 11 கிலோ நண்டுகள் கைப்பற்றப்பட்டுடன் இம் மீனவர்களும்  பொருள்களும் கிலினொச்சி கடற்றொழில் உதவி பணிப்பாளரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டனர்.