எழுவைதீவு மின் விநியோகத்திட்டத்திற்கு கடற்படை உதவி

வடக்கு கடற்படை கட்டளை பிரதேசத்திற்கு உட்பட்ட கடற்படை வீரர்கள் எழுவைதீவு மின் விநியோகத்திட்டத்திற்கு தேவைப்பட்ட 125 மின் விநியோக கம்பங்களை கொண்டுசெல்ல உதவி அளித்தனர். மின்சார சபையின் வேண்டுகோளுக்கிணைய இம் மின் கம்பங்களையும் பளு தூக்கும் கனரக வாகனம் ஒன்றையும் ஊர்கவற்துரை கரப்பன் இறங்குதுறையிலிருந்து எழுவைதீவுக்கு கொண்டுசெல்ல பெப்ரவரி 24ஆம் 26 ஆம் திகதி வரை உதவி வழங்கினர்.

கடற்படையின் இச்சேவையினால் வடக்கு பிரதேச தீவின் மின் விநியோக திட்டத்தை துரிதப்படுத்த உதவுவதுடன் அப்பிரதேச மக்களுக்கு மின் வசதியை பெற உதவியாகவும் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.