விஜயத்துக்கு வந்த நியூசிலாந்து பிரதமருக்கு கடற்படையினரால் செங்கம்பள வரவேற்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 

மூன்று நாட்கள் விஜயத்துக்கு இலங்கைக்கு வந்த நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ அவர்களுக்கு செங்கம்பள வரவேற்பு ஏற்பாடுகள் ஜனாதிபதி செயலகத்தினால் இன்று (24) கடற்படையின் 03 அதிகாரிகள் மற்றும் 79 வீர்ர்களினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச் சந்தர்பத்திற்கு கடற்படைத் தளபதி வைஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களும் கலந்துகொண்டார்.