சட்டவிரோதா மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று உள்ளூர் மீனவர்கள் கடற்படையினரால் கைது

சட்டவிரோதா மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று உள்ளூர் மீனவர்களும் ஒரு இழைபடகும் கற்பிட்டி இலங்கை கடற்படை கப்பல் ‘விஜய’ கட்டளைக்குட்பட்ட அதிகாரிகளினால் பெப்ரவரி 16 (2016) அன்று கைதுசெய்யப்பட்டனர். மாம்புரிக்கும் சின்னப்பாடுவிற்கும் இடைப்பட்ட கடற்பகுதியில் சட்டவிரோதா மீன்பிடியில் ஈடுபட்ட வேளையிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டனர். மேலும் இவர்களுடன் ஒரு சோடி சுழி யோடும் காலணிகள் , ஒரு ஜி பி எஸ் கருவி, பத்து ஒட்சிசன் சிலிண்டர்கள் மற்றும் 42 கடல் சங்குகளும் கைப்பற்றப்பட்டன.

கைதுசெய்யப்பட்ட மூவரும் பொருள்களும் புத்தளம் மீன்பிடித்துறை உதவிப் பணிப்பாளரிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டனர்.