காணாமற்போன ஜந்து மீனவர்களின் சடலங்களை கடற்படையினர் மீட்பு.
 

கடந்த 29ம் திகதி காலி மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற சாகர புதா 3 எனும் மீன்பிடி படகு 31 ம் திகதி குடா ராவணா கோட்டைக்கு 40 கடல் மைல் தூரத்தில் வைத்து கடலில் வனிக கப்பல் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் அப்படகில் சென்ற ஆறு மீனவர்களில் ஜந்து பேர் காணாமல் சென்றனர்.உயிர் தப்பிய ஒருவர் வேறொரு மீன்பிடி படகின் மூலம் காப்பாற்றப்பட்டார்.

கடற்தொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தினால் விடப்பட்ட வேண்டுகோளுக்கமைய கடற்படையினால் உடனடியாக பீ 450 மற்றும் பீ 485 அதிவேக தாக்குதல் படகுகள் காணாமற்போன மீனவர்களைத் தேடி அனுப்பட்டன. ஆழ்கடலில் வைத்து கடற்படை சுழியோடிகளின் உதவியினால் மீன் வலைகளில் சிக்கியிருந்த ஜந்து மீனவர்களின் சடலங்களும் இன்று (02 ஆம் திகதி) மாலை மீட்கப்பட்டன. பின்னர் காலித்துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட சடலங்கள் காலி பொலிசாரிடம் கையளிக்கப்பட்டன