கடலில் நோய்வாய்ப்பட்ட மீனவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வர கடற்படை உதவி

காலி கலங்கரை விளக்கத்திலிருந்து 115 கடல் மைல் (213 கிமீ) தொலைவில் ஆழ்கடலில் நோய்வாய்ப்பட்ட இலங்கை மீனவர் ஒருவரை பல நாள் மீன்பிடி படகொன்றில் இருந்து இன்று (2022 பிப்ரவரி 21) கடற்படையினரால் மீட்டப்பட்டார்.

2022 பெப்ரவரி 08 ஆம் திகதி காலி மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 'ராஜா 01' (பதிவு எண். IMUL-A-0105 KLT) என்ற பல நாள் மீன்பிடிப் படகில் இருந்த மீனவர் ஒருவர் திடீரென நோய்வாய்ப்பட்டதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் கடற்படைத் தலைமையகத்தில் உள்ள கடல்சார் தேடல் மற்றும் மீட்பு மையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளது.

அதற்கு உடனடியாக பதிலளித்த கடற்படையினர், நோய்வாய்ப்பட்ட மீனவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வருவதற்காக தெற்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட 4 வது துரித தாக்குதல் படையின் P 485 படகை அப்பகுதிக்கு அனுப்பி வைத்தனர். நோய்வாய்ப்பட்ட மீனவர் துரித தாக்குதல் படகு மூலம் காலி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக காலி கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இலங்கை கடல்சார் தேடல் மற்றும் மீட்பு மண்டலத்தில் பாதிக்கப்பட்டும் கடற்சார் மற்றும் மீன்பிடி சமூகங்களுக்கு நிவாரணம் வழங்க கடற்படை எப்போதும் தயாராக உள்ளது.