ரூ .24 மில்லியனுக்கும் மேல் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் ஒருவர் யாழ்ப்பாணத்தில் கைது

யாழ்ப்பாணம், சுழிபுரம் பகுதியில் 2022 ஜனவரி மாதம் 21 ஆம் திகதி இரவு மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது 80 கிலோ 500 கிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவரை இலங்கை கடற்படையினர் மற்றும் பொலிஸார் கைது செய்தனர்.

கடல் வழியாக மேற்கொள்ளப்படுகின்ற போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களை தடுக்க, கடற்படை தீவைச் சுற்றியுள்ள கடல் பகுதியை மற்றும் கரையோரப் பகுதிகளை உள்ளடக்கி பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் படி, வடக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் உத்தர நிருவனத்தைச் சேர்ந்த கடற்படை வீரர்கள் காங்கேசன்துறை பொலிஸாருடன் இணைந்து யாழ்ப்பாணம், சுழிபுரம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வீடு ஒன்றை சோதனையிட்டனர். அப்போது குறித்த வீட்டில் 05 பைகளில் 38 பொதிகளாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 80 கிலோ 500 கிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் வீதி மதிப்பு 24 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமாக இருக்கும் என நம்பப்படுகிறது.

தற்போதுள்ள சுகாதார வழிகாட்டுதல்களின் படி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை மூலம் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 38 வயதுடைய சுழிபுரம் பகுதியில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டதுடன், கேரள கஞ்சா மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.