சீரற்ற காலநிலையின் போது மக்களுக்கு நிவாரணம் வழங்க கடற்படை நிவாரண குழுக்கள் ஆயத்தம்

தீவை பாதிக்கும் பாதகமான காலநிலை காரணமாக எதிர்காலத்தில் வெள்ள அபாயம் ஏற்பட்டால் மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதற்காக கடற்படையினர் 35 கடற்படை நிவாரண குழுக்களை மேற்கு மற்றும் தெற்கு கடற்படை கட்டளைகளில் தயார் நிலையில் வைத்துள்ளனர்.

இதன்படி, மேற்கு கடற்படை கட்டளை இரத்தினபுரி மாவட்டத்தில் மூன்று (03) நிவாரண குழுக்களை வெள்ளத்திற்கு முன் தயார்படுத்தியுள்ளது, மேலும் 24 நிவாரணக் குழுக்கள் மேற்கு கடற்படை கட்டளையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும், உடுகம பிரதேச செயலகப் பிரிவின் உடமலத்த பகுதிக்கு தெற்கு கடற்படைக் கட்டளை மூலம் நிவாரணக் குழுவொன்றை அனுப்பப்பட்டது. இது தவிர, மேலும் 07 கடற்படை நிவாரணக் குழுக்கள் தெற்கு கடற்படைக் கட்டளையில் தயார் நிலையில் உள்ளன.

மேலும், தீவை பாதிக்கும் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு தேவையான நிவாரண குழுக்களை நிலைநிறுத்துவதற்கு கடற்படையினர் தீவிர எச்சரிக்கையுடன் உள்ளனர்.