வணிக வெடிபொருட்களுடன் சந்தேக நபரை கைது செய்ய கடற்படை உதவி

கடற்படையினர் மற்றும் பொலிஸார் இனைந்து 2021 பிப்ரவரி 24 அன்று திருகோணமலை கின்னியா பகுதியில் மேற்கொண்டுள்ள சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, விற்பனைக்கு தயாராகப்பட்ட நீர் ஜெல் மற்றும் பாதுகாப்பு உருகிகள் என அறியப்பட்ட வணிக வெடிபொருட்களுடன் ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர், திருகோணமலை பொலிஸாருடன் ஒருங்கிணைந்து, திருகோணமலை கின்னியா பகுதியில் மேற்கொண்டுள்ள கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான வீடொன்றை சோதனை செய்தனர். அப்போது, அங்கு விற்பனைக்கு தயாராகப்பட்ட 37 நீர் ஜெல் குச்சிகள் மற்றும் 206 அடி நீளமான பாதுகாப்பு உருகிகள் என அறியப்பட்ட வணிக வெடிபொருட்களுடன் 42 வயதான சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டார். குவாரி தொழிலுக்கு வணிக வெடிபொருளாக வெளியிடப்படும் இந்த நீர் ஜெல் மற்றும் பாதுகாப்பு உருகிகள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுவோருக்கு விற்க தயாராக இருந்ததாக கடற்படை சந்தேகப்படுகிறது.

கோவிட் 19 பரவுவதைத் தடுக்க வழங்கப்பட்ட சுகாதார அறிவுறுத்தல்கள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளப்பட்ட இந்த சிறப்பு நடவடிக்கை மூலம் கைது செய்யப்பட்ட வெடிபொருட்கள் மற்றும் சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை பொலிஸ் தலைமையகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.