“லைபீரியக் கொடியின் கீழ் பயணம் செய்த ஒரு கப்பல் சிறிய இராவணா பாறையில் சிக்கி ஆபத்தில் உள்ளது” என்ற தலைப்பில் 2021 ஜனவரி 24 ஆம் திகதி வெளியிடப்பட்ட செய்தியுடன் தொடர்புடையது.

2021 ஜனவரி 23 ஆம் திகதி இலங்கையின் தென்கிழக்கு பகுதியில் 5.5 கடல் மைல் (10 கி.மீ) தூரத்தில் சிறிய இராவணா பாறையில் சிக்கி ஆபத்தான MV Eurosun என்ற கப்பல், 2021 ஜனவரி 24 அன்று அந்த பகுதியில் ஏற்பட்ட அலைச்சலுகையால் பாறையில் இருந்து விலகியது. பின்னர் சிறிய இராவணா பாறைக்கு தென்மேற்கே ஐந்து கடல் மைல் தொலைவில் பாதுகாப்பாக நங்கூரமிடப்பட்டது.

இதற்கிடையில், கடற்படை சுழியோடி குழுவினர் இன்று (ஜனவரி 25) கப்பலின் நீருக்கடியில் உள்ள பகுதிகளில் பரிசோதனையை மேற்கொண்டதுடன், பாறை மற்றும் மணல் அடியில் மடிந்து கொண்டிருந்த கப்பலின் கீல் பகுதிக்கு லேசான சேதங்களை ஏற்பட்டுள்ளதை அவதானித்தது. மேலும், கப்பல் கணக்கெடுப்பாளர்கள் வணிகக் கப்பல் பணிப்பாளர் நாயகம் இயக்கியபடி அந்த சேதங்களை ஆராய்ந்த பின்னர் ஒரு அறிக்கையை தயாரிக்க உள்ளனர்.

அதன்படி, கப்பலின் முக்கிய இயந்திரங்களில் செயல்பாட்டைக் கொண்டு கப்பல் பயணம் செய்வது பொருத்தமானதல்ல என்று கூறி கொழும்பில் உள்ள கடல் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் எம்.வி. யூரோசூன் கப்பலின் உள்ளூர் நிறுவனத்திடம், அந்தக் கப்பலை அருகிலுள்ள துறைமுகத்திற்கு இழுத்துச் சென்று அதன் மேலோட்டத்திற்கு ஏற்பட்ட சேதத்தை சரிசெய்யுமாறு அறிவுறுத்தியது.