ரூ.31 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள கேரள கஞ்சாவுடன் 06 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது

கடற்படை தீவைச் சுற்றி மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கைகளின் போது 106 கிலோ கிராமுக்கு மேற்பட்ட கேரளா கஞ்சாவுடன் ஆறு (06) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் இன்று (நவம்பர் 10) மாதகல்தூரை கடற்கரை பகுதியில் மேற்கொண்டுள்ள சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது கடற்படை நடவடிக்கைகள் காரணத்தினால் கைவிடப்பட்ட சந்தேகத்திற்கிடமான டிங்கி படகொன்று சோதனை செய்யப்பட்டதுடன் அங்கிருந்து 100 கிலொ கிராமுக்கு மேற்பட்ட கேரள கஞ்சா மீட்கப்பட்டன. கடத்தல்காரர்களால் நாட்டிற்கு கடத்த முயன்ற இந்த கேரள கஞ்சா 4 சாக்குகளில் 10 பொதிகலாக அடைக்கப்பட்டுள்ளதுடன் கடத்தலில் ஈடுபட்ட சந்தேக நபர்களைக் கண்டுபிடிக்க கடற்படை இப்பகுதியில் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையில், நவம்பர் 01 மற்றும் 08 ஆகிய திகதிகளில் மன்னார், புத்துகுதிரிப்பு மற்றும் இருகுலம்பிட்டி பகுதிகளில் வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர் நடத்திய இரண்டு தேடுதல் நடவடிக்கைகளின் போது, 05 கிலோகிராம் 907 கிராம் கேரள கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த மூன்று சந்தேக நபர்கள் (03) கைது செய்யப்பட்டனர். இது தவிர, மன்னார் மற்றும் தோட்டவேலி பகுதிகளில் நடத்தப்பட்ட நடவடிக்கைகளின் போது மேலும் இரண்டு (02) சந்தேக நபர்கள் 04 கிராம் மற்றும் 650 மிலி.கிராம் ஹெராயினுடன் கைது செய்யப்பட்டனர்.

மேலும், இலங்கை கடலோர காவல்படை மொணராகலை கலால் நிலையத்துடன் இணைந்து தனமல்வில குடாஒய பகுதியில் மேற்கொண்டுள்ள சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது 03 கிலோ மற்றும் 600 கிராம் உள்ளூர் கஞ்சா வைத்திருந்த ஒரு சந்தேக நபர் (01) கைது செய்யப்பட்டார். COVID-19 தொற்றுநோயைத் தடுப்பதற்காக வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு மற்றும் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைகளால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மதிப்பு ரூ. 31 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டவர்கள் 19 முதல் 56 வயது வரையிலான மன்னார், இருகுலம்பிட்டி, தாரபுரம் மற்றும் குடாஒய பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். குளித்த சந்தேக நபர்கள் போதைபொருட்களுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் மற்றும் இளவாலி காவல் நிலையங்கள் மற்றும் மோனராகல கலால் நிலையம் ஆகியவற்றில் ஒப்படைக்கப்பட்டனர்.