சட்டவிரோத மீன்பிடித்தல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 38 நபர்கள் கடற்படை நடவடிக்கைகள் மூலம் கைது

2020 அக்டோபர் 15 ஆம் திகதி முதல் 2020 அக்டோபர் 20 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில், கடற்படையினர் மற்றும் காவல்துறையினர் இனைந்து மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கைகளின் போது சட்டவிரோத மீன்பிடித்தல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 38 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

அதன்படி, கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் போல்டர் துடுவ, பவுல் துடுவ, கோபால்புரம், நயாரு ஆகிய கடற்பகுதிகளிலும், கொடுவமட களப்பு பகுதியிலும் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளின் போது தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் பயன்படுத்தி, மின்சார விளக்குகளைப் பயன்படுத்தி மற்றும் சட்டவிரோத சுழியோடி நடவடிக்கைகள் மூலம் மீன்பிடியில் ஈடுபட்ட 28 நபர்கள் 07 டிங்கி படகுகள், தடைசெய்யப்பட்ட வலைகள் மற்றும் பல மீன்பிடி பொருட்கள் கைது செய்தனர்.

இதற்கிடையில், வடமேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் உச்சமுனாய் தீவுக்கு வட மேற்கு கடல் பகுதியில் சட்டவிரோத சுழியோடி நடவடிக்கைகள் மூலம் மீன்பிடியில் ஈடுபட்ட 08 நபர்கள் 02 டிங்கி படகுகள் மற்றும் சில சுழியோடி பொருட்களுடன் கைது செய்தனர்.

மேலும், மன்னார் பொலிஸாருடன் ஒருங்கிணைந்து வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர் மன்னார், இருக்குளம்பிட்டி பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது சங்குகள் சேகரிக்கும் இடமொன்றில் இருந்து 70 மிமீ க்கும் குறைவான விட்டம் கொண்ட 60 சங்குக்களுடன் ஒரு சந்தேக நபரை கைது செய்தனர். மேலும்,அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 1814 சங்கு ஓடுகளை சட்டவிரோதமான முறையில் சேகரித்து வைத்திருந்த மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டார்.

இவ்வாரு கைது செய்யப்பட்ட நபர்கள் 21 முதல் 55 வயது வரையிலான பொடுவக்கட்டு, குச்சவேலி, சாண்டிபே, நிலாவேலி, இக்பார் நகர், கோக்கிலாய், கந்தக்குலிய, கல்பிட்டி மற்றும் இருக்குளம்பிட்டி பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களுடன் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு இயக்குநர்களிடம், முல்லைதீவ், குச்சவேலி, கல்பிட்டி மீன்வள ஆய்வாளர்களிடம் மற்றும் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.