செய்தி வெளியீடு


“New Diamond கச்சா எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டது” என்ற தலைப்பில் 2020 செப்டம்பர் 06 அன்று 1830 மணிக்கு வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு தொடர்பானது.

MT New Diamond கச்சா எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீயை முந்தைய நாள் (2020 செப்டம்பர் 6,) மாலை 1500 மணியளவில் கட்டுப்படுத்த இலங்கை கடற்படை உள்ளிட்ட பேரிடர் மேலாண்மை குழுக்களால் முடிந்தது. இருப்பினும், கப்பலுக்குள் அதிக வெப்பநிலை மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளால் மீண்டும் தீ ஏற்பட வாய்ப்புள்ளது. குறித்த காரணத்தினால் பேரழிவு மேலாண்மைக்கு அனுப்பப்பட்ட கப்பல்கள் மற்றும் படகுகள் தொடர்ந்து பாதிக்கப்பட்ட கப்பலை குளிர்விக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றது.

பாதிக்கப்பட்ட கப்பலின் வணிக மற்றும் தொழில்நுட்ப நடவடிக்கைகளை பெற்ற நிறுவனத்தால் முந்தைய நாள் தீவுக்கு அனுப்பப்பட்ட மீட்பு நடவடிக்கை நிபுணர்கள், பேரிடர் மதிப்பீட்டாளர்கள் மற்றும் சட்ட ஆலோசகர் உட்பட 10 பேர் கொண்ட பிரிட்டிஷ் மற்றும் நெதர்லாந்து நிபுணர்களின் ஆறு மீட்பு நிபுணர்கள் இலங்கை கடற்படை படகுகள் மூலம் பாதிக்கப்பட்ட கப்பல் உள்ள கடல் பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்கள் இன்னும் நிலைமையை ஆய்வு செய்து வருகின்றனர்.

இது தவிர, இந்நிறுவனம் நெதர்லாந்து, பிரிட்டன் மற்றும் பெல்ஜியத்திலிருந்து 11 பேரழிவு மேலாண்மை நிபுணர்களைக் கொண்ட மற்றொரு குழுவை இன்று (2020 செப்டம்பர் 07) காலை இலங்கைக்கு அனுப்பியது. அவர்களை இன்று கடற்படையால் பாதிக்கப்பட்ட கப்பலின் ஆய்வுக்காக குறித்த கப்பல் உள்ள கடல் பகுதிக்கு அழைத்து செல்லப்படும்.

தீ விபத்துக்குள்ளான கப்பல் இப்போது சங்கமங்கந்த பகுதியில் இருந்து 30 கடல் மைல் (56 கி.மீ) தொலைவில் உள்ளதுடன் அங்கு பணிகள் நடைபெற்று வருகின்றது. அதன்படி, 09 இந்திய மற்றும் இலங்கை கப்பல்கள், 05 டக் படகுகள், இலங்கை விமானப்படையின் விமானங்கள் மற்றும் இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான 01 விமானம் இன்னும் பேரழிவு நிவாரண நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

கப்பலில் ஏற்பட்ட தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும், கப்பல் தீ பிடிக்கும் அபாயம் நீங்கும் வரை இலங்கை கடற்படை மற்றும் பிற பங்குதாரர்கள் பேரழிவு நிவாரண நடவடிக்கையைத் தொடருவார்கள்.