சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட மஞ்சள் பொதிகள் மன்னார் பகுதியில் வைத்து கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட உலர்ந்த மஞ்சள் பொதிகளுடன் ஒரு சந்தேகநபர் மன்னார் ஒலுதுடுவாய் கடற்கரை பகுதியில் வைத்து 2020 ஜூலை 28 ஆம் திகதி கடற்படை கைப்பற்றியது.

கோவிட் 19 வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்கள் கடல் வழியாக இலங்கைக்கு நகர்த்துவதைக் கண்காணிப்பதற்கும், கடற்கரையில் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்கும் கடற்படை சிறப்பு ரோந்துப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்கள் மன்னார், ஒலுதுடுவாய் கடற்கரையில் மெற்கொண்டுள்ள ரோந்துப் பணியின் போது சந்தேகத்திற்கிடமான பல பொதிகளை கொண்டு சென்ற ஒருவரை சோதனை செய்தனர். அப்போது 999 கிலொ கிராம் மற்றும் 500 கிராம் எடையுள்ள உலர்ந்த மஞ்சள் கொண்ட 20 பொதிகள் அவரிடம் இருப்பது தெரியவந்தது. குறித்த மஞ்சள் பொதிகள் கடல் வழியாக இந்த நாட்டிற்கு கடத்தப்பட்டிருப்பது தெரியவந்த நிலையில், சந்தேகநபரும் மஞ்சள் பொதிகளும் கடற்படை காவலுக்கு எடுக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், பறிமுதல் செய்யப்பட்ட மஞ்சள் பொதிகள் சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் சுங்க அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டதுடன் தற்போதுள்ள கோவிட் 19 ஆபத்து நிலைமை குறித்து, சந்தேக நபரை சுய தனிமைப்படுத்தலுக்காக சுகாதார மருத்துவ அதிகாரி மூலம் மன்னார் பொது சுகாதார ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டன.