சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 27 நபர்கள் கடற்படையால் கைது

இலங்கை பெருங்கடல் பிராந்தியத்தின் கடல் மற்றும் மீன்வள வளங்களை பாதுகாக்க பல ரோந்துப் பணிகளை மேற்கொண்டு வரும் கடற்படை, 2020 ஜூலை 18 முதல் 23 வரை கிழக்கு கடற்படை கட்டளையில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள 27 நபர்களுடன் சட்டவிரோத மீன்பிடி வலைகள் உள்ளிட்ட பல மீன்பிடி பொருட்கள் பறிமுதல் செய்தனர்.

அதன்படி, 2020 ஜூலை 18, அன்று, திருகோணமலை ஃபவுல் துடுவ கடல் பகுதியில் நடத்தப்பட்ட இரண்டு தேடுதல் நடவடிக்கைகளின் போது, மூன்று (03) மீன்பிடி படகுகளில் இருந்து சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 18 நபர்களுடன் குறித்த வலைகள் மற்றும் அவர்களால் பிடிக்கப்பட்ட 265 கிலோ கிராம் மீன்களையும் கைது செய்யப்பட்டன. இவ்வாரு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 24 முதல் 60 வயதுக்குட்பட்ட திருகோணமலை பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். தொடர்புடைய வலைகள், மீன்பிடிக் படகுகள், மீன் மற்றும் பிற மீன்பிடி கருவிகள் மேலதிக விசாரணைகளுக்காக இலங்கை கடலோர காவல்படையின் கிழக்கு பிராந்திய இயக்குநர் மூலமாக திருகோணமலை மீன்வள உதவி இயக்குநரிடம் ஒப்படைக்கப்பட்டன.

இதற்கிடையில், 2020 ஜூலை 20 ஆம் திகதி கொரல் துடுவ வடகிழக்கு கடலில் நடத்தப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 03 பேரை கடற்படை கைது செய்தது. அவர்கள் பயன்படுத்திய டிங்கி படகு, தடைசெய்யப்பட்ட வலை மற்றும் பிற மீன்பிடி சாதனங்களும் கைது செய்யப்பட்டன. குறித்த சந்தேக நபர்கள் கின்னியா பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக கடற்படையால் இலங்கை கடலோர காவல்படையின் கிழக்கு பிராந்திய இயக்குனர் மூலமாக திருகோணமலை மீன்வளத்துறை உதவி இயக்குநரிடம் ஒப்படைக்கப்பட்டது.

கிழக்கு கடற்படைக் கட்டளையின் கடற்படையினர் குழு, 2020 ஜூலை 22, ஆம் திகதி மட்டக்களப்பு களப்பு பகுதியில் மேற்கொண்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது கொடுவமட பகுதியில் விரிக்கப்பட்ட சுமார் 100 மீட்டர் நீளமுள்ள ஆறு தடைசெய்யப்பட்ட வலைகளை கண்டுபிடித்தனர். இந்த சட்டவிரோத வலைகள் மட்டக்களப்பு மீன்வளத்துறை உதவி இயக்குநரிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.

மேலும், 2020 ஜூலை 23 ஆம் திகதி திருகோணமலை கல்லடிசேனை கடல் பகுதியில் நடத்தப்பட்ட மற்றொரு தேடுதல் நடவடிக்கையின் போது, அங்கீகரிக்கப்படாத வலைகளுடன் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 06 பேர் கடற்படையால் கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்கள் 19 முதல் 46 வயதுக்குட்பட்ட கந்தலே மற்றும் தோபூர் பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட வலைகள் மற்றும் பிற மீன்பிடி பொருட்களுடன் சந்தெகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக திருகோணமலை மீன்வளத்துறை உதவி இயக்குநரிடம் ஒப்படைக்கப்பட்டன.